சங்கீதம் 123 (Psalms 123)

Tamil Bible — Tamil (தமிழ்)

1 பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.

2 இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.

3 எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.

4 சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.

  • Psalms 122 — previous chapter
  • Psalms 124 — next chapter
  • Psalms 123 — English (KJV)
  • Psalms 123 — English (WEB)
  • Psalms 123 — Hindi (हिंदी)
  • Psalms 123 — Kannada (ಕನ್ನಡ)
  • Psalms 123 — Malayalam (മലയാളം)