இயேசுவின் நாமமே திருநாமம் முழு - Yesuvin Naamamae Thiru Naamam
Song • Tamil Christian Songs • Tamil

இயேசுவின் நாமமே திருநாமம் முழு - Yesuvin Naamamae Thiru Naamam

Lyrics

இயேசுவின் நாமமே திருநாமம் – முழு இருதயத்தால் தொழுவோம் நாமும். 1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே. 2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை நித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம். 3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது சத்திய விதேய மனமொத்தநாமம். 4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம் – நமை அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம். 5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி – பெரும் பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி.

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian Songs
LanguageTamil
Duration3:40
Chat with us