Unakothaasai Varum Nal Uyar - உனக்கொத்தாசை வரும் நல் உயர்
Song • Tamil Christian Songs • Tamil

Unakothaasai Varum Nal Uyar - உனக்கொத்தாசை வரும் நல் உயர்

Lyrics

நல் உயர் பருவதம் இதோ பல்லவி உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம்,-இதோ! அனுபல்லவி தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே. – உன சரணங்கள் 1. வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின் மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? – உன 2. காலைத் தள்ளாடவொட்டார், கரத்தைத் தளரவொட்டார்; மாலை உறங்கமாட்டார், மறதியாய்ப் போக மாட்டார். – உன 3. கர்த்தருனைக் காப்பவராம், கரமதில் சேர்ப்பவராம்; நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம். – உன 4. பகலில் வெயிலெனிலும், இரவில் நிலவெனிலும், இகல் தருவதுமில்லை, இன்னல் செய்வதுமில்லை. – உன 5. தீங்கு தொடராதுன்னை, தீமை படராதுன்மேல்; தாங்குவார் தூதர் கோடி, தாளிடறாதபடி. – உன 6. போக்கும் ஆசீர்வாதமாம், வரத்தும் ஆசீர்வாதமாம்; காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே. – உன 7. துன்ப துயரத்திலும் துக்க சமயத்திலும், இன்பமுறும் பொழுதும் எல்லாம் உனக்கவரே. – உன

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian Songs
LanguageTamil
Duration4:40
Chat with us