Lyrics
சும்மா நான் இருக்க மாட்டேன் – நான்
கம்முன்னு கிடக்க மாட்டேன் – 2
ஜம்முன்னு உட்கார மாட்டேன் – நான்
உம்முன்னு இருக்கவும் மாட்டேன் – 2- ஏனென்னா
இயேசு ராஜா வருக மிக சமீபம் – அதையே
எடுத்துச் சொல்ல ஊரு ஊரா அலைவேன்- சும்ம நான்
நாடு நகரம் பட்டி தொட்டியினு பார்க்காம் – நானும்
நாதன் இயேசு நாமத்தெடுத்துச் சொல்லுவேன் – 2
ஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம்-..சும்மா
வீடு நிலம் சொத்து வரிசைனு பாக்காம – நானும்
வீதி வீதியா ஓடி சத்யம் சொல்லுவேன் – 2
ஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம்–.சும்மா
பட்டம் படிப்பு பதவி பெரிசா பாக்காம – நானும்
தியாகமாக ஊழியம் செய்யுவேன் – 2
ஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம்–.சும்மா
Comments
No comments yet. Be the first!