Lyrics
பிஞ்சு போன உள்ளம் உள்ள
பிஞ்சு நானய்யா
தஞ்சமே நீர்தான் எந்தன் ஏசைய்யா – 2
வஞ்சனை நிறந்த இந்த உலகில் தானய்யா
அஞ்சி நிற்கும் எனக்கு தான்
துணைதான் நீரே ஐயா
ஏசய்யா ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா
1. காணும் இடம் எல்லாம் கானல் நீர் ஐயா
தாகம் தீர்க்கும் ஜீவநதி நீர்தான் இயேசய்யா – 2
பசி தீர்க்கும் ஜீவ அப்பம் நீர்தான் இயேசய்யா – 2
புல்லுள்ள இடத்தில் மேய்க்கும்
மேய்ப்பன் நீர் ஐயா – 2
ஏசப்பா ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா
2. சுளகினால் புடைக்கப்பட்ட கோதுமை நானய்யா
உதறி தள்ளப்பட்ட குப்பை நானய்யா – 2
கதறி உந்தன் பாதம் வந்தேன் ஏசய்யா – 2
சிதறிய எனக்கு வாழ்வு தந்தீர் ஏசய்யா – 2
ஏசய்யா ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா
3. உலகம் நேசம் எனக்கு இனி
வேண்டாம் இயேசய்யா
உண்மையான உந்தன் அன்பு
போதும் இயேசய்யா – 2
உன் எண்ணம் ஏக்கம் எல்லாமே
நீர்தான் இயேசய்யா – 2
உம் வருகையிலே என்னை
சேர்த்துக் கொள்ளும் ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா
Comments
No comments yet. Be the first!