மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ - Magane un nenjsenakku
Song • Gospel • Tamil

மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ - Magane un nenjsenakku

2 plays

Lyrics

மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ மோட்ச வாழ்வை தருவேன் இது பாராயோ அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே உன்பாவம் முற்றும் பரிகரிப்பேனே -அதை உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே பாவம் அனைத்துமே விட்டோடாயோ -நித்ய பரகதி வாழ்வை இன்றே தேடாயோ உலக வாழ்வினை விட்டகல்வாயே – மகா உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே அதில் ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreGospel
LanguageTamil
Duration3:40
Chat with us