Yesu Nasarayin Nadhipathiye-யேசு நசரையி னதிபதியே
Song • Gospel • Tamil

Yesu Nasarayin Nadhipathiye-யேசு நசரையி னதிபதியே

4 plays

Lyrics

யேசு நசரையி னதிபதியே, – பவ நரர்பினை யென வரும். தேசுறு பரதல வாசப் பிரகாசனே ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. — யேசு 1. இந்த உலகு சுவை தந்து போராடுதே, எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே; தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே; சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. — யேசு 2. நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது; தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது; தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். — யேசு 3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்; கேடுபாடுகள் யாவையும் தீரும்; பொறுமை, நம்பிக்கை, அன்பு போதவே தாரும்; பொன்னு லோகமதில் என்னையே சேரும். — யேசு

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreGospel
LanguageTamil
Duration0:00
Chat with us