Lyrics
வீடும் ஆஸ்தியும் பிதாக்கள்
வைக்கும் சுதந்திரம் – 2
புத்தியுள்ள மனைவியோ
கர்த்தர் அருளும் ஈவு – 2
1. குணசாலியான ஸ்திரீயை
கண்டுப்பிடிப்பவன் யார்?
அவள் விலையோ முத்துவைப்
பார்க்கிலும் அதிகமானது – 2
புத்தியுள்ள ஸ்திரீதன்
வீட்டைக் கட்டுகிறார் – 2
புத்தியில்லாத ஸ்திரியோ
அதை இடித்துப் போடுகிறாள் – 2
2. உன் மனைவி உன் விட்டோரம்
கனி தரும் திராட்சைச் செடி
உன் பிள்ளைகள் உன் வீட்டைச்
சுற்றிலும் மலிவக் கன்றுகள் – 2
குடும்பம் என்னும் களிவிளக்கை
ஏற்ற வந்தவன் – 2
இரவும் பகலும் அவளின் தீபம்
அலைவது இல்லையே – 2
3. மணவாளன் கிறிஸ்துவுக்காக
ஏங்கி நிநிற்பவள் தன்னை
மணவாட்டியாக
அலங்கரித்து எதிரே செல்பவள்- 2
பரலோகத்தின் நமலாட்டத்தை
பூமியில் செய்பலள் – 2
கர்த்தரின் வருகைக்கு ஆயத்தமாக
காத்து இருப்பவள் – 2
Comments
No comments yet. Be the first!