Ooru Ennum Oorula – ஊரு என்னும் ஊருல தேராகு
Song • Tamil Christian • Tamil

Ooru Ennum Oorula – ஊரு என்னும் ஊருல தேராகு

1 plays

Lyrics

ஊரு என்னும் ஊருல தேராகு என்னும் பேருல பேரு பெற்ற மனுஷன் ஒருவன் வாழ்ந்தான் – 2 அவன் மண்ணினாலே சிலைகள் செய்து மண்ணான மனிதனையே மடமையாக்கும் தொழிலை செய்து வாழ்ந்தான் – 2 அப்பேற்பட்ட மனிதனுக்கு ஆபிரகாமுனு பேர் கொண்ட – 2 ஆண்டவரின் பிள்ளை ஒருவன் பிறந்தான் அவன் உண்மையுள்ளவன் தேவபயம் நிறைந்தவன் அவன் நீதியுள்ளவன், விசுவாசமுள்ளவன் – 2 தேவசித்தம் செய்ய சத்தம் கேட்டு தன்னை தத்தம் செய்த நல்ல நண்பன் நல்ல அன்பன் – 2 அப்பா அம்மா என் சொல்ல கேளுங்க – பெத்த தப்பா எப்போதும் நடத்தாதீங்கோ – 2 ஜாதி ஜனம் பேரைச் சொல்லி வீட்ட சொல்லி நாட்ட சொல்லி – 2 அவன் எண்ணங்களுக்குப் பூட்டு போடாதிங்கோ அவன் எதிர்காலத்த வீணடிச்சுடாதீங்கோ – 2 ஆ வீட்ட விட்டு – 2 நாட்ட விட்டு ஜாதிய விட்டு ஜனத்தை விட்டு தந்தைய விட்டு தாய விட்டு ஓடி வா – 2 நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் – உன் பேரை பெருமை படுத்துவேன் – உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன் உன்னை கீழாக்காமல் உன்னை மேலாக்குவேன் – 2 உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் – 2 உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன் – 2 நீ போகும் இடமெல்லாம் உன்னை ஆசீர்வதிப்பேன் உன்னை காண்போர் கண்களெல்லாம் தயை கிடைக்க செய்யுவேன் – 2 உன்னை தேசத்திற்கு திரும்பும் வரை கைவிடாமல் காக்கும் உன் தேவன் நான் உன் தேவன்

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian
LanguageTamil
Duration5:20
Chat with us