En yesu rajavukke ennalum sthothiram-என் இயேசு ராஜாவுக்கே
Song • Praise • Tamil

En yesu rajavukke ennalum sthothiram-என் இயேசு ராஜாவுக்கே

Lyrics

என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே எந்நாளும் ஸ்தோத்திரம் 1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை நித்தமும் நினைக்கிறேன் முழு உள்ளத்தோடு உம் நாமம் பாடிப் புகழுவேன் – நான் 2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் நேசர் நீர் அணைத்தீரே கைவிடப்பட்டு கதறினேன் கர்த்தர் நீர் தேற்றினீர்…ஆ…ஆ 3. இனி நான் வாழ்வது உமக்காக உமது மகிமைக்காக உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன் ஓயாமல் பாடுவேன் – நான் 4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே நோய்களை சுகமாக்கினீர் எனது ஜீவனை அழிவில் நின்று காத்து இரட்சித்தீரே…ஆ…ஆ

Comments

No comments yet. Be the first!

Song Info

GenrePraise
LanguageTamil
Duration4:40
Chat with us