Lyrics
ஈன புத்தி படைத்தவனே யூதாஸ்காரியோத்து – இந்த
கோணபுத்தி எப்படி வந்துச்சு சொல்லு காரியோத்து – 2
காசுக்காக ஆசைப்பட்ட யூதாஸ்காரியோத்து – 2
இயேசுவை காட்டி கொடுத்தாயடா யூதாஸ் காரியோத்து – 2
முந்தி முந்தி பேசி திரிந்த சீமோன் பேதுரு – நீ
மூணு தடவை மறுதலிச்சது எப்படி பேதுரு – 2
ஜாமக்கோழி கூவும் முன்னே சீமோன் பேதுரு – 2
இயேசு அறியேன் என்று
சத்தியமடிச்ச சீமோன் பேதுரு – 2
நெஞ்சு மேல சாஞ்சுறங்கின யோவான் அண்ணே – இப்போ
அஞ்சி ஓடி எங்கே மறைஞ்ச யோவான் அண்ணே – 2
துண்டக் காணோம் துணிய காணோம்னு
ஓடின அண்ணே – 2 – இப்போ
துணிவு உனக்கு எங்கே போச்சு
சொல்லுங்க அண்ணே – 2
அஞ்சு அப்பம் ரெண்டு மீனு அந்திரேயாவே இப்போ
தந்திரமா ஓடி போனது எங்கே ஐயாவே – 2
சொர்க்க வழியக் கேட்டு தொலைச்ச
பிலிப்பு அண்ணே – 2 – இப்போ
பக்கவழியா ஓடிப் போனது
எங்கேங்க அண்ணே – 2
தோளு மேலே சாஞ்சுறங்கின தோமா தாத்தாவே- இப்ப
ஏமாற்றும் மாந்தர்களில் ஒருவனானாயே – 2
தழும்பு மேல கைவச்ச தோமா தாத்தாவே – 2 – இந்த
தரணி மீட்ட தேவ அன்பை மறந்த தாத்தாவே – 2
ஆனாலும் நம்ம மேலே அன்பு வச்சு
இந்த தரணியிலே நல்லவராய் நன்மை செய்த
நம்ம இயேசு ஆண்டவராம்
நம்பு அவரை நம்பு
தெம்பு அதுவே தெம்பு
Comments
No comments yet. Be the first!