Deva Pitha Enthan Meippen Allo - தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ
Song • Christian Funeral Songs • Tamil

Deva Pitha Enthan Meippen Allo - தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ

1 plays

Lyrics

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ, சிறுமை தாழ்ச்சி அடைகிலனே . ஆவலதாய் எனைப் பைம்புன் மேல் அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ 1. ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி அடியேன் கால்களை நீதி என்னும் நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ 2. சா நிழல் பள்ளத் திறங்கிடினும், சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ; வானபரன் என்னோடிருப்பார் ; வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ 3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய் எனக்கென் றேற்படுத்திச் சுக தயிலம் கொண்டென் தலையைச் சுபமாய் அபிஷேகம் செய்குவார் ,-தேவ 4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம் அருளும் நலமுமாய் நிரம்பும் , நேயன் வீட்டினில் சிறப்போடே , நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் –தேவ

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreChristian Funeral Songs
LanguageTamil
Duration3:40
Chat with us