Athikaalai Thuyil Ezhunthu - அதிகாலை துயில் எழுந்து
Song • Tamil Christian • Tamil

Athikaalai Thuyil Ezhunthu - அதிகாலை துயில் எழுந்து

Lyrics

அதிகாலை துயில் எழுந்து ஆண்டவரின் பாதம் பணிந்து அப்பா அப்பா என்று கூப்பிடுவேன் குளித்து எண்ணெய் பூசி தெய்வீக உடையணிந்து ஜெபக்களம் சென்றிடுவேன் – 2 நான் ஜெபக்களம் சென்றிடுவேன் – 2 1. விடியலில் விரைந்தெழுந்து விண்ணவரின் முகம் காண – 2 கன்மலை மேல் வந்து காத்திருப்பேன் தேவனின் பாதம் அமர்ந்து உபவாச தவம் இருந்து உன்னதர் புகழ் பாடுவேன் – நான் உன்னதர் புகழ் பாடுவேன் – 2 2. கடந்திட்ட நாட்கள் எல்லாம் கரம் தன்னில் தூக்கிக் கொண்டு சுமந்திட்ட விதம்தனை நினைத்திடுவேன் இருந்திட இடம் தந்து அருந்திட உணவு தந்து – 2 அணிந்திட ஆடை தந்தீரே – என்னை சுகமுடன் வாழ வைத்தீரே 3. இனி வரும் நாட்களெல்லாம் கனிதரும் நல்மரமாய் – 2 திகழ்ந்திட அருள்புரிந்து வரம் தரணும் வாழுகின்ற நாட்கள் எல்லாம் உமக்காகவே வாழ்ந்து – 2 பரலோகம் வந்து சேரணும் – நான் பரலோகம் வந்து சேரணும் – 2

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian
LanguageTamil
Duration5:20
Chat with us